திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 60 தொகுதி! இல்லையேல் கூட்டணி வேண்டாம்... போர்க்கொடி தூக்கிய முக்கிய புள்ளிகள்!
TN Congress DMK Alliance TN Assembly Election 2026
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., கிராமக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்\, கட்சி அமைப்பு மற்றும் கூட்டணி தொடர்பாக சில மாவட்ட தலைவர்கள் குழப்பங்களை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ், "72 மாவட்டங்களைக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு தொகுதியிலும் போட்டியிடாமல் இருக்க முடியுமா? குறைந்தது 60 தொகுதிகள் கேட்டு பெற வேண்டும், இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
ஆட்சி மற்றும் அதிகார பங்கீட்டில் முக்கிய பங்கு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதே போல் பலரும் கூடுதல் தொகுதிகள் கோர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, "ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அரசு தவறுகளை சுட்டிக்காட்டி, மக்களின் பிரச்சனைகளை பேச வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
பீட்டர் அல்போன்ஸ், "எம்.எல்.ஏ. ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கலாம்; அதற்கான நேரம் வரும். தற்போது கட்சியை பலப்படுத்துவது முக்கியம்," என்றார்.
முடிவில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "என் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. எந்த பிரச்சனையும் நேரில் தெரிவிக்கலாம்," என கூறி கூட்டத்தை முடித்தார்.
English Summary
TN Congress DMK Alliance TN Assembly Election 2026