ஈரானில் பயங்கர வெடிவிபத்து: 04 பேர் பலி, 500 பேர் காயம்..!
Massive explosion in Iran 04 people killed 500 injured
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த பெரிய வெடி விபத்தின் அதிர்வலை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தீயை அணைக்கவும், சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றதாக கூறப்படுகிறது. குறித்த வெடி விபத்து காரணமாக துறைமுகத்தில் அதிகளவு கரும்புகை சூழப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Massive explosion in Iran 04 people killed 500 injured