தமிழக அரசுக்கு வேண்டுகோள்!!! கிறிஸ்தவர்களை எண்ணி புனித வெள்ளி அன்று டாஸ்மாக்-க்கு விடுமுறை அளியுங்கள்..!!! - EPS - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான 'எடப்பாடி பழனிசாமி'  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.

இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.

கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்திலுள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே வரவேற்கும் விதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN government consider Christians and give holiday TASMAC on Good Friday EPS


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->