தமிழக அரசின் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதலில் முறைகேடா.? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
tn govt order issue srilanka help chennai hc
இலங்கைக்கு உதவுவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய தமிழக பிறப்பித்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க உள்ளதாக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அதிக விலைக்கு வாங்கு உள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், "ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 பைசா என்ற அடிப்படையில், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய, 134 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆனால், இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதிலிருந்து அரிசியை கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும். இது குறித்து சமூக ஆரவாளர்கள் கேள்வி கேட்டால், அரிசி கொள்முதல் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
எனவே, இந்த அரிசி கொள்முதல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், "மத்திய அரசின் அனுமதியோடு தான் இலங்கைக்கு அரிசி அனுப்பப்படுகிறது. அவசர நேரங்களில் அரிசியை கொள்முதல் செய்வதற்கு விலக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து, இந்த வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என்று வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்,
English Summary
tn govt order issue srilanka help chennai hc