#BigBreaking | அமைச்சர் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் இலாக்கா! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவைகள் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை (Chennai Metropolitan Development Authority) கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி பெரியசாமிக்கு, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு கூடுதலாக கிராமத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister posting 14122022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->