தமிழில் முழக்கமிட்டு மக்களவையில் பதவியேற்ற தமிழக எம். பி. க்கள்..!!
TN MPs Taken Oath in Tamil in Loksabha
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று மக்களவை கூடியதும் இடைக்கால சபாநாயகர் தேர்வு முதலில் நடந்தது.
இதையடுத்து இடைக்கால சபாநாயகர் பிரதமர் மோடி உட்பட அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி நேற்று பிரதமர் மோடி உட்பட 280 பேர் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றனர். அதைத் தொடர்ந்து இன்றும் 2 ஆவது நாளாக பதவிப் பிரமாணம் நடந்து வருகிறது.
அந்த வகையில் தமிழக எம். பி. க்கள் அனைவரும் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். முதலில் திருவள்ளூர் தொகுதி எம். பி. சசிகாந்த் செந்தில், தனது கையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்துக் கொண்டு தமிழில் பதவி ஏற்றார்.
தொடர்ந்து டாக்டர் கலாநிதி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் பதவியேற்றனர். இதையடுத்து பதவியேற்ற மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவியேற்ற பின் 'வேண்டாம் நீட்' என்று முழக்கமிட்டார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் எம். பி. திருமாவளவன் 'ஜன நாயகம் வாழ்க' என்று கோஷமிட்டார்.
இதையடுத்து பதவியேற்ற கனிமொழி பதவியேற்ற பின் 'அரசியலமைப்பு வாழ்க' என்று கோஷமிட்டார். தொடர்ந்து டி. ஆர். பாலு, மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்ட அனைத்து தமிழக எம். பி. க்களும் தமிழில் கோஷமிட்டபடி பதவியேற்றனர்.
English Summary
TN MPs Taken Oath in Tamil in Loksabha