#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சற்றுமுன் நிறைவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சற்றுமுன் முடிவடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்த உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்காக கடந்த 28ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்தது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்ட்டு, நேற்று ஒரே நாளில் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

மாலை 5 மணியுடன் (சற்றுமுன்) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சற்றுமுன் முடிவடைந்துள்ளது.

நாளை சனிக்கிழமை அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வருகின்ற ஏழாம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, 22ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Urban Election Nomination End


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->