தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
tn weather report 3 june 2022
தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் தென்காசி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாது.
வரும் 5, 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை :

English Summary
tn weather report 3 june 2022