கன்னியாகுமரி கிறிஸ்தவ திருவிழாவில் சோகம்; மின்சாரம் தாக்கி 04 பேர் பலி..!
04 people died due to electrocution at the Christian festival in Kanyakumari
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை என்ற கடற்கரை கிராமத்தில் கிறிஸ்தவ திருவிழாவில் நடக்கும் தேர் பவனிக்காக சிலர் அலங்கார வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது சிலர் இரும்பு ஏணியை கொண்டு அவர்கள் உயர்த்தி பிடித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது ஏணி உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
04 people died due to electrocution at the Christian festival in Kanyakumari