பரபரப்பில் அரசியல் களம் - கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்.! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. 

இந்தத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெறுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் அவர், இந்த குழு வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதில், கொட்டனுக்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவுக்கு அக்கட்சி எம்.பி டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

மேலும், கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட இளையோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், கோவி. செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., உள்ளிட்ட புதியவர்களுக்கும் இந்த முறை‌ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் குழுவில், பத்து பேர் உள்ளனர். நேற்று தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடிய நிலையில், தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today Election report preparation committee meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->