இன்று மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயரான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today mayor and deputy mayor election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->