நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள குறிப்பாக,
1) மத்திய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்புவோம்.
2) நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதி வாரிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
3) அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறை நீக்கப்படும்.
4) அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும்.
5) அங்கன்வாடியில் கூடுதலாக 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
6) மனித கழிவுகளை மனிதரே அல்லும் நடைமுறை ஒழிக்கப்படும்.
7) மத்திய அரசு பணியிடங்களில் 50% பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
8) மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கலையும் வகையில் ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.
9) தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனத்தவர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும்.
10) தனிநபர் சட்டங்களில் வரும் மாற்றம் அனைத்து சமுதாயத்தினரின் சம்மதம் பெற்ற பிறகு மேற்கொள்ளப்படும்.
11) அரசு தேர்வுகள் விண்ணப்ப கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும்.
12) முதியோர்கள், விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்த்தப்படும்.
13) 21 வயதுக்கு கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
14) மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையும் வகையில் மாற்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.
15) அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிங்ஞை அங்கீகரிக்கப்படும்.
16) LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
17) புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
18) ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து.
19) அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
20) டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.
21) பழங்குடியினர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.
22) ராணுவ ஆள் சேர்ப்புக்காக கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
23) மார்ச் 15, 2024 வரை செலுத்தாமல் உள்ள மாணவர்களின் கல்விக் கடன் வட்டியுடன் ரத்து செய்யப்படும்.
24) 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தினக்கூலி நானூறு ரூபாயாக உயர்த்தப்படும்.
25) பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வியை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும்
26) உச்சநீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும்.
27) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
28) மாநில அரசுகளை கலங்காலசித்து தேசிய கொள்கை திருத்தப்படும்.
29) நீட், சி.யூ.இ.டி உள்ளிட்ட தேர்வுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
30) தகுதி தேர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
31) எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கட்சித்தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
32) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கப்படும்.
33) விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.
34) மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றப்படும்.
35) ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது. பழைய முறையே தொடரும்.
36) பாஜக அரசு கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்.
37) கொரோனா காலங்களில் தேர்வு எழுத முடியாமல் போன இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
38) மாநில அரசுகளையும் கலங்காலோசித்து தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்படும்.
39) காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
40) கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்