வரலாற்று கடமை பயணத்திற்கு பொறுப்பு வழங்கிய தலைவர் விஜய்க்கு நன்றி; ஆதவ் அர்ஜுனா பதிவு..! - Seithipunal
Seithipunal


ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி, தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்தது குறித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், "புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகத்தில்' மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோர்த்துள்ளேன்.

தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம்.

'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மானுட மாண்பு, 'நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அரசியலமைப்பு நெறி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூகநீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன்.

மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhav Arjuna post thanking TVK leader Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->