திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதித்த போக்கு வரத்து போலீசார் - நடந்தது என்ன?

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதளத்திலும் அதிக அளவில் புகார்கள் வருகின்றன. 

அதன் மீதும் போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளை நிற கார் ஒன்றில் தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தபட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அடர்த்தியாக கருப்பு நிற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு, பம்பர் பொருத்தப்பட்டுள்ளதுடன், நம்பர் பிளேட்டும் சரியாக இல்லை என்று ஒருவர் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் படி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கார் கண்ணாடியில் கருப்பு நிற 'ஸ்டிக்கர்' ஒட்டியதற்காக ரூ.500 அபராதமும், நம்பர் பிளேட் முறையாக இல்லாததால் ரூ.1,500 அபராதமும், பம்பர் பொருத்தியதற்காக ரூ.500 என்றும் மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டதற்கான சலானை புகார் அளித்தவருக்கு சமூக வலைதளத்திலேயே பதிலாக போல்கீசார் பதிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு சொந்தமானது என்பதும், அவர் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினையை தனது சொந்த காரில் பொருத்தி இருப்பதும் தெரியவந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic police fine to dindukal liyoni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->