"தமிழ்நாட்டிலேயே முதல் திருநங்கைன்னு ஆர்டர் கொடுத்தாங்க. எங்க ரிசல்ட்ட விட மாட்ராங்க." திருநங்கை வேதனை.!  - Seithipunal
Seithipunal


தாங்கள் எழுதிய அரசு தேர்வு முடிவுகளை கல்வித்துறை வெளியிட மறுப்பதாக திருநர் கூட்டமைப்பு இயக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய திருநங்கை ஒருவர், "அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிலேயே முதல் திருநங்கைன்னு ஆர்டர் கொடுத்தாங்க. இற்ற்ர் திமுக ஆட்சியில் 2008இல் இவ்வளவு கௌரவத்துடன் இந்த ஆர்டரை எனக்கு கொடுத்தாங்க. டீச்சர் ட்ரைனிங் முடித்துவிட்டு, MA.Bed முடித்துவிட்டு இப்போ PG TRP எழுதிவிட்டு காத்திருக்கிறேன்.

ஆண் பெண்ணுக்கு ரிசல்ட் அறிவிக்கிறாங்க. ஆனா டிரான்ஸ் ஜெண்டர்க்கு அறிவிக்க மாட்டேன் என்கிறார்கள். ஹால் டிக்கெட்டில் ட்ரான்ஸ் ஜெண்டர் என்று மென்ஷன் பண்ணி, எக்ஸாம் ஹாலில் கடைசியில் உட்கார வைக்கிறார்கள். 

கடந்த 2022 பிப்ரவரியில் எழுதிய ஒரு எக்ஸாமில் ஒரு தனி அறையில் அழைத்துச் சென்று என்னை பரிசோதிக்கிறார்கள். ஒரு பெண்ணை வைத்து முழுமையாக பரிசோதிக்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எக்ஸாம் தான எழுத போனோம்? நாங்கள் ஒன்றும் தீவிரவாதி இல்லையே.?" என்று வேதனை பொங்க ஆவேசமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender results could Not Released by Education department


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->