புதிய கொடியை அறிமுகப்படுத்திய டிடிவி தினகரன்! ஓ.., இதன் காரணமா? - Seithipunal
Seithipunal


அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் C.N.அண்ணாதுரை அவர்கள் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி (இதேநாள்) காஞ்சிபுரத்தில் பிறந்தார். 

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் (தி.க) சேர்ந்தார். பெரியாருடன் கருது மோதல் ஏற்பட்டு தி.க.வில் இருந்து விலகி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்த அண்ணா, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையை கொண்டவர். 1965ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றது. அதன் எதிரொளியக இந்தி மொழி பேசா மக்கள் விரும்பும் வரை, ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினராகவும் (1962) மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவும் (1967) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதராஸ் மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு" என மாற்றினார். இன்று அண்ணாதுரையின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான 'இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை'யின் கொடி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran AMMK new flag


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->