#BREAKING :: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் போட்டி..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. 

அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "அமமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட உள்ளது. வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நான் கூட தேர்தலில் போட்டியிடலாம். தேர்தலில் நிற்பதற்கு எனக்கு பயமில்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். இதன் மூலம் டிடிவி தினகரன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran contests in Erode East Assembly byElection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->