கொடூர கொலை., கொந்தளிப்பில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகம் முழுவதும் படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு திரு.வே.சுப்பிரமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். 

அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். 

தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகம் முழுவதும் படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சமூக விரோதிகள் சுதந்திரமாக சுற்றித் திரியக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையும் அதனை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் இப்போதாவது விழித்துக்கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாகிவிடும்" என்று, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about subramani murder issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->