இதெல்லாம் வெட்கக் கேடானது - கொந்தளிப்பில் டிடிவி தினகரன் போட்ட டிவிட்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்அப் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய லாக்அப் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? 

ஒவ்வொரு முறை இப்படி நடக்கும் போதும் காவல்துறையினரோடு சேர்ந்து கொண்டு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பூசி மெழுகுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது சரியா?

புகாருக்கு ஆளானவர்களை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம், காவல்துறையினருக்கு புரியும் வகையில் தெளிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும். 

காவல் நிலையங்கள் மனிதநேயத்தோடும், மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இருக்கிறது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN TWIT JUNE 26


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->