ஈரோடு கிழக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவு: நாதக வேட்புமனுவில் வைக்கப்பட்ட சின்னம் குறித்த கோரிக்கை!
NTK Candidate Nomination DMK Erode East by poll 2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சற்றுமுன் நிறைவு பெற்றுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக இடை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் தமிழக வெற்றிக் கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.
தற்போது இந்த இடைத்தேர்தல் திமுக vs நாம் தமிழர் கட்சிக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக அமைந்துள்ளது. திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த இரண்டு வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தனர். மேலும் 9-கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனது வேட்பு மனுவில், கரும்பு விவசாயி அல்லது மைக் சின்னத்தை வழங்கும்படி கோரிக்கை அளித்துள்ளார்.
கடந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது. மேலும் அக்கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், மக்களை தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி வலுவடைந்தது.
தற்போது இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் அல்லது மைக் சின்னத்தை கேட்டு மனு அளித்துள்ளது. இதில் எந்த சின்ன ஒதுக்குவது என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
NTK Candidate Nomination DMK Erode East by poll 2025