தமிழக அரசுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Pongal Prize case chennai hc BJP
தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கிய பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் கொடுக்கப்படவில்லை. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன் தாஸ் என்பவர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், "பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு, கடுமையாக கண்டனம் தெரிவித்து வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய எச்சரித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் முறையிட்டார் பாஜக வழக்கறிஞர் முறையிட்டார்.
வழக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான விஷயங்களில் தலையிட முடியாது என்றும், ரொக்கப் பணம் வழங்குவது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும், இது அரசின் தனிப்பட்ட முடிவு என்பதால் உத்தரவிட இயலாது என்று தெரிவித்தனர்.
English Summary
Pongal Prize case chennai hc BJP