இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்., டிடிவி தினகரன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. 

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகும் வகையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு வரும் நிலையில், இந்த மசோதா மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

மத்திய ஆட்சியாளர்கள் நடுநிலையோடு செயல்படாதபோது, தற்போது மாநிலங்களிடம் இருக்கும் அணைகளின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளில் சென்றுவிட்டால் நிலைமை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் இத்தகைய செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN WART TO CENTRAL GOVT FOR DAM LAW


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->