மீண்டும் கைதாக போகும் டிடிவி தினகரன்.. பரபரப்பில் அமமுகவினர்.!!
ttv dinakaran may be arrested again in two leaf symbol case
ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரி சுகேஷ்சந்திர சேகரிடம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் கைது செய்தி செய்யப்பட்டு, பின்னர் விடுகிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத், மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்தார். வழக்கறிஞர் கோபிநாத் மோகன்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில். இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார்.
அப்போது சுகேஷ் சந்திர சேகருடனான தொடர்பு, வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை உள்ளிட்டவை குறித்து டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சில மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திர சேகரை மீண்டும் கைது செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளது. விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் டிடிவி தினகரன் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
ttv dinakaran may be arrested again in two leaf symbol case