எடப்பாடி கூடவா? அதற்கு வாய்ப்பே இல்லை!! சசிகலாவுக்கு தினகரன் பதிலடி!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விமான மூலம் கோவை வந்தடைந்தார். அதன் பிறகு கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளராக சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அமமுக அழிந்துவிடும் என விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் "வினாசகாலே விபரீதபுத்தி என்பது போல அழியப் போகிறவர்கள் அடுத்தவர்களை பார்த்து இப்படி தான் பேசுவார்கள். துரியோதனக் கூட்டம் எப்போதும் வெற்றி பெற்றது கிடையாது அவர்கள் வீழ்வது உறுதி" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரிந்துள்ள அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைக்கப்படுபவர்கள் என சசிகலா கூறியிருப்புக்கான கேள்விக்கு பதில் அளித்த அவர் "அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம் தான் இதைப் பற்றி கேட்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பழனிச்சாமியுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை" என சசிகலாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dinakaran response to Sasikala comment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->