#Breaking || ஒமைக்ரேன் எதிரொலி., நாளை நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாளான நாளை, அமமுக சார்பாக நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு, கொரோனா தொற்று அதிகரிப்பதால் காவல்துறையினரின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமமுக தலைமை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி நாளைய தினம்(24-12-2021) புரட்சித்தலைவர் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை, சென்னையில் கொரோனா பெருந்தொற்று மீண்டும்  அதிகரிப்பதால் காவல்துறையினர் தற்போது ரத்து செய்திருக்கிறார்கள்.

எனவே, சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களுக்கிடையே நோய்ப் பரவல் ஏற்படக் காரணமாகிவிடக்கூடாது என்கிற அக்கறையோடு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் உரிய கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளின் படி புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv program cancel for omicron issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->