கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்.? தலைகீழாக மாறிய கருத்துக்கணிப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது .

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள் தனியார் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பிரபல செய்தி தொலைக்காட்சியான TV9 நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக TV 9 மற்றும் C voter நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ங பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய கருத்துக்கணிப்பில்  தலைகீழாக மாறி பாஜக 105-110 இடங்களையும், காங்கிரஸ் 90-97 இடங்களையும், ஜேடிஎஸ் 19-22 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tv9 announced Karnataka assembly election survey


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->