தவெக-வில் இணைவு? அதெல்லாம் முற்றிலும் வதந்தி! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
TVK GINJI RAMACHANDRAN ISSUE ADMK EPS PRESS MEET
இன்னும் ஒரே ஒரு திரைப்படம் முடிந்த பிறகு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க உள்ள விஜய், ஏற்கனவே அவரின் கட்சி கொடி மற்றும் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார்.
கட்சியின் முதல் மாநாடு வருகின்ற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது.
குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவர் செஞ்சி இராமச்சந்திரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, வேண்டுமென்றே இது போன்ற புரளிகளை கிளப்பி விடுகிறார்கள்;
அதிமுக ஒரு கடல், செஞ்சி ராமச்சந்திரனை போன்று 1000-கணக்கான பேர் அதிமுகவில் அங்கம் வகிக்கின்றனர், உழைத்து வருகின்றனர்.
அதிமுக என்பது வலிமையான இயக்கம். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்து பொன் விழா கண்ட கட்சி;
இதுபோன்று வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
TVK GINJI RAMACHANDRAN ISSUE ADMK EPS PRESS MEET