மொத்தம் 33 நிபந்தனைகள்! அரை மணி நேரம்தான் கெடு! விஜய் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Tvk maanadu police condition permission
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது உறுதி ஆகி உள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள்.
மாநாடு முழுவதும், பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.
மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும்.
2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் உள்ளிட்ட 33 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட அரசியல் கட்சிக்காக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tvk maanadu police condition permission