தவெக வழிகாட்டுதல் குழு அமைப்பு!...இதோ வெளியான முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தில் வழிகாட்டுதல் குழுவினை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த மாதம் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், பின்னர்  மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் வழிகாட்டுதல் குழுவினை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த வழிகாட்டுதல் குழுவில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறவுள்ளதாகவும், இவர்கள் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கும் பணியை மேற்கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk steering committee formation here the important release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->