உன் கூட்டணி "போதைக்கு அம்பேத்கர் ஊறுகாயா"? கீழ்த்தனமாக பேசிய விசிக எம்எல்ஏ! தவெக தரப்பில் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆளூர் ஷாநவாஸ் தொடர்ந்து கீழ்த்தனமான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அருவருக்கத்தக்க அரசியல்வாதியாக முழுவதுமாக மாறியிருக்கிறார் என்று, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சையத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "முதலில் “நேத்து வந்த கூத்தாடி பேசலாமா” என்று செய்யும் தொழிலை வைத்து தகுதி கற்பித்து இழிவு செய்து மிக கீழ்த்தனமான விமர்சனத்தை முன்வைத்தார்.

இப்போது “உன் கூட்டணி போதைக்கு அம்பேத்கர் ஊறுகாயா”? என்று ஒருமையில் பேசி “போதை & ஊறுகாய்” என்றெல்லாம் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். 

முதலில் விஜய் அவர்கள் அவரின் மாநாட்டிலும் வி.சி.க என்று பெயரை சொல்லி கூட்ணிக்கு அழைக்கவில்லை, பொதுவாக த.வெ.கவின் கூட்டணி நிலைப்பாட்டை தான் “அதிகாரப் பகிர்வு”என்று அறிவித்தார். அது பொதுவாக சொல்லப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்விலும் விஜய் அவர்கள் கூறியது ஆளும் அரசு மக்கள் விரோத ஆட்சியை தந்துவிட்டு, 2026ல் இறுமாப்பாக 200 வெல்வோம் என்பது கூட்டணி கனக்குகளை மட்டுமே நம்பி தான்,மக்கள் சக்தியை நம்பி இல்லை. அந்த கூட்டணி கனக்குகளை மக்களே minus ஆக்குவார்கள் என்று. அண்ணன் திருமாவை குறிப்பிட்டு பேசியது, திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்ச்சுக்கு வரமுடியாமல் போனாலும் அவரின் மனது இன்றைக்கு நம்ம கூடதான் இருக்கும் என்று அந்த நிகழ்ச்சியை பொருட்படுத்தி தான் பேசினார், கூட்டணி பற்றி பேசவில்லை. இதை உங்கள் தலைவர் திருமாவளவன் அவர்களே சரியாக புரிந்து கொண்டுள்ளார், அவர் இதை கூட்டணி சார்ந்த பேச்சாக பார்க்கவில்லை. (உங்களின் கவனத்திற்காக செய்தியாளர்களிடம் திருமா அவர்கள் பேசிய கானொளி இணைக்கப்பட்டுள்ளது)

நீங்கள் தி.மு.கவுக்கு உங்களை தினம் தினம் நிரூபிக்கனும் என்பதற்காக எங்கள் தலைவரை தொடர்ந்து கொச்சையாகவும் கீழ்த்தனமாகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதே மேடையில் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனும் சமகால அரசியல் பேசியிருந்தார். மன்னர்ஆட்சி முறையை 2026ல் முடிவுக்கு கொண்டு வரனும் என்று. 

இது வி.சி.க கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரான பேச்சு. நேர்மை இருந்தால் உங்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு நன்கு தெரிந்திருந்தும் அதற்கு எதிராகப் பேசிய ஆதவ் அர்ஜூனா மீது இது போன்ற கீழ்த்தனமாக ஒருமையில் பேசி விமர்சனம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Syed condemn to VCK MLA


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->