தன் சட்டையை தானே கிழித்துக்கொண்டு வீதியில் நின்று வித்தை காட்டினால் அது ஜனநாயக அறப்போரா? பதிலடி கொடுத்த எச்.ராஜா!
BJP H Raja Condemn to DMk Govt MK Stalin Annamalai Sattai
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு விவகாரத்தை திமுகவினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முக ஸ்டாலின் அவர்கள் தன் சட்டையை தானே கிழித்துக்கொண்டு சட்டசபையில் சண்டைபோட்டு வீதியில் நின்று வித்தை காட்டினால் அது ஜனநாயக அறப்போர்?
ஆனால் அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு தமிழகத்தின் அவலநிலையை எடுத்துக் கூறினால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலா?
திருந்த வேண்டியது திமுகவும் அதன் ஊதுகுழல்களும் தான்..!!" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எச்.ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு விடுத்துள்ள மற்றும் ஒரு செய்திக்குறிப்பில், "நீ நகர செயலாளராக இருந்தால் என்ன? எங்களை ஒன்றுமே செய்ய முடியாது" இது எங்க ஆட்சி என்று சொல்லி சிதம்பரத்தில் குடும்பத்தோடு கடலுக்கு குளிக்கச் சென்ற பெண்களை கொடூரமாக தாக்கிய ரெளடி கும்பல்..!!
திருநங்கை காலில் விழுந்து தப்பித்த பெண்கள்!!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
இதுதான் எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?
பதில் சொல்லுங்கள் முக ஸ்டாலின் அவர்களே?
சிதம்பரத்தில் கடற்கரை பகுதியில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த சமூக விரோதிகள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP H Raja Condemn to DMk Govt MK Stalin Annamalai Sattai