அண்ணாமலை வச்சிருந்தது பஞ்சால் ஆன சாட்டை - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் சேகர் பாபு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சாட்டையால் அடித்து நேற்று நூதன போராட்டம் நடத்தினார். அண்ணாமலை நடத்திய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கிண்டல் செய்தனர். இந்த நிலையில், அண்ணாமலையின் சாட்டையடி குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேங்காய் நார் அல்லது தோலினாலோ ஆன சாட்டையில் அடித்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக பருத்தி பஞ்சினால் தயாரிக்கப்பட்ட சாட்டையினை கொண்டு அடித்துக் கொண்டுள்ளார். 

சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்த ஒன்றுதான். அண்ணாமலை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி எப்போதும் அவர் நிச்சயமாக காலில் செருப்பு அணிய முடியாது. ஏனென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sekar babu speech about annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->