நடிகர் விஜயின் சாயம் வெளுக்கிறதா? பெரியார் திடல் அரசியல் - கொந்தளிக்கும் தமிழிசை! - Seithipunal
Seithipunal


பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக நடிகர் விஜய் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சி என்பது குறிபிடித்தக்கது. 

இந்நிலையில், திராவிட அரசியலை கையில் எடுத்துள்ள நடிகர் விஜயை, பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "தமிழகத்தில் திமுக சாயலில் மற்றும் ஒரு அரசியல் கட்சி தேவையில்லை. தற்போதைய தேவை தேசிய சாயலில் தான். 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திராவிட வழியில்லாமல், வேறு வழியில் பயணிப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் தனது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். 

ஒரு சாயலை (திமுக) சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். இந்த சாயம் வெளுக்க போகிறதா? இல்லை வேறு சாயம் பூசிக் கொண்டிருக்கிறாரா என்பது பின்புதான் தெரியவரும்.

அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளும் நடிகர் விஜயை விட்டுவிடுவார்களா? அவரின் திரைப்படத்தையே வெளியிட, மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கின்றனர். 

ஒருவேளை நடிகர் விஜய் தேசியத்துடன் வந்தால், நாங்கள் பரந்த மனதோடு எடுத்துச் செல்வோம். மாறாக திராவிட சாயத்தை பூசினால்............. அவ்வளவு தான்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay BJP Tamilisai DMK MKStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->