திமுக, பாஜகஅரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: தொடங்கி வைத்த விஜய்!
Tvk vijay start get out iyakkam against DMK BJP
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை மாமல்லபுரம் பூஞ்சேரியில் அமைந்துள்ள தனியார் சொகுசு விடுதியில் விமர்சையாக கொண்டாடி வருகிறது.
விழாவில் தவெக தலைவர் விஜய், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தநிலையில், மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ‘கெட் அவுட்’ கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். முதல் கையெழுத்தை அவர் பதிவு செய்ததுடன், கட்சி நிர்வாகிகளும் இதில் இணைந்தனர்.
இந்த இயக்கத்திற்கு அமைக்கப்பட்ட பேனர்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. விழா நடைபெறும் வழிநெடுகிலும் விஜய்க்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு மற்றும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை குற்றம்சாட்டும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
English Summary
Tvk vijay start get out iyakkam against DMK BJP