திடீரென தாக்கிய கரடி!!! உயிர் தப்ப முடியாமல் இருவர் பலி! - வருஷநாடு கோவில் பாறை.... - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மணிகண்டன் மற்றும் தர்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான கருப்பையா இருவரும் ஒரு வீட்டைச் சேர்ந்தவர்களாகும்.இருவரது மனைவிகளும் இறந்து விட்டதால், இருவரும் கோவில் பாறைக் கண்மாய் அருகே உள்ள அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் பல மாதங்களாக விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்குச் சாரல் மழைப் பெய்தது. அப்போதும் மணிகண்டனுக்குச் சொந்தமான தோட்டத்தில் இருவரும் எலுமிச்சைப் பழங்கள் பறித்து விற்க இருசக்கர வாகனத்தில் ஏற்றுவதற்காக நடந்து வந்துள்ளனர்.

திடீரென தாக்கிய கரடி:

அப்போது திடீரென அவ்வழியே வந்த கரடி இருவரையும் கொடூரமாகத் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் வனத்துறையினர் பரிதாபமாக இறந்து கிடந்த கருப்பையா மற்றும் மணிகண்டன் இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

கடமலைக் குண்டு :

மேலும் கடமலைக் குண்டு வருஷநாடு பகுதியில் தொடர்ந்து கரடி தாக்கி பல கிராம மக்கள் இறந்து வருவதால் மலைக் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் அவர்களின் அச்சத்தைப் போக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A bear suddenly attacked Two people died without being able to escape Varushanadu Temple Rock


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->