ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!!! பணக்காரர்கள் குடியேற கோல்டு கார்டு திட்டம்!!!
Trumps dramatic announcement Gold Card program for the rich to immigrate
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே பலவிதமான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில், அவர் தினமும் வெளியிடும் புதுப்புது அறிவிப்புகள் மக்களிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று அதிபர் டிரம்ப் எதிரிகளை எதிர்நோக்கும் பார்வையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறி வசித்து வந்தவர்களைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணி தீவிரமாக நடந்த நிலையில் அமெரிக்காவில் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு புதிய கோல்ட் கார்டு திட்டம் ஒன்றை அந்நாட்டு அதிபரான டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கோல்ட் கார்ட் திட்டம்:
மேலும் இந்தக் கோல்ட் கார்ட் திட்டமானது புதியதாகக் குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 43 கோடிக்கு விற்கப்படும். இதில் இந்தக் கார்டின் உரிமமானது, கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் அதாவது கிரீன் கார்டு போலவே இன்னும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் இதன் அம்சங்களைக் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் கோல்ட் கார்ட் குறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுக்னிக் கூறியதாவது," இது குடியுரிமையை எளிதில் பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்தப் பிரீமியம் கோல்ட் கார்ட் வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து நிறைய வரிகளைச் செலுத்தி நிறைய பேருக்கு வேலைக் கொடுப்பார்கள். கோல்ட் கார்ட் விற்பனை இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். இதைச் செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Trumps dramatic announcement Gold Card program for the rich to immigrate