சமரசமின்றித் தொடரட்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளருக்கு விஜய் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக புதிய தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வு நடந்தது. இந்த சந்திப்பில், மாநில செயலாளராக இருந்து வந்த கே. பாலகிருஷ்ணன், "கட்சியின் அமைப்பு விதிகளின்படி 72 வயதிற்கு மேல் எந்தப் பொறுப்பிலும் நீடிக்க இயலாது" எனக் குறிப்பிட்டு, தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.  

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவருமான சண்முகம் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாநில புதிய செயலாளராக தேர்வான பெ.சண்முகத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அதில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay wish CPM State Secretary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->