இன்றுடன் நிறைவடைகிறது ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான். அதிலும் மதுரை மாவட்டத்தில் தான் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகளவில் நடைபெறும். அதன் படி இந்த ஆண்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது .

அதன் படி காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட்டது .

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today closed jallikattu online booking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->