சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.!
Laying of cement road Leader of Opposition Siva inaugurated the event
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதி கிருஷ்ணா நகரில்ரூ. 30 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வில்லியனூர், கிருஷ்ணா நகரில் கான்கிரீட் சாலை அமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தது வந்தனர்.இந்தநிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்களின் தீவிர முயற்சியால் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 30 லட்சத்து 18 ஆயிரத்து 676 ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை சீரமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, ஊர் முக்கியஸ்தர்கள் சபரி, ராஜி, கே வி ஆர் ஏழுமலை, ரகுராமன், சேகர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Laying of cement road Leader of Opposition Siva inaugurated the event