கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்..? பயிற்சி கொடுக்கும் த.வெ.க..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 120 மாவட்ட செயலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டச் செயலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து, த.வெ.க.,வில் பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கப்பட்டது. 

த.வெ.க தலைவர் விஜய் நடித்த படங்களை பார்த்து ரசித்து பழகிய மாவட்ட செயலர்கள், கட்சி நிகழ்ச்சிகளிளிலும் முன்வரிசையில் அமர்ந்து, விசில் அடிப்பது, கட்சித்துண்டை தலைக்கு மேல் சுற்றி ஆட்டம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று பின்வரிசையில் அமர்ந்திருக்கும் கட்சி நிர்வாகிகளும், இவாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த பார்த்த மற்ற கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர். இதன் காரணமாக இதை விஜய் கவனத்திற்கு, அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் ஆகியோர் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க, விஜய் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, சென்னை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நேற்று, மாவட்டச் செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பயிற்சிகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK will train the party district secretary on how to behave


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->