ஊர்தியில் ஊதாரி.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட தமிழக ஊர்தி, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்தியை இன்று மதியம் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

தமிழகத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை நாட்டிற்கு வெளிப்படுத்தும் விதமாக 4 அலங்கார ஊர்திகள் அணிவகுக்கப்பட்டன. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற முதல் ஊர்தியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெற்றது. 

இரண்டாவது ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டி வீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியவர்களுடன் வேலூர் கோட்டை, காளையார் கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெற்று இருந்தது. 

மூன்றாவது அலங்கார ஊர்தியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் சிலைகளுடன் சுதேசி கப்பல் இடம்பெற்றது. 

நான்காவது அலங்கார ஊர்தியில், பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ வே சு ஐயர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பாபா ஆகிய தலைவர்கள் சிலைகள் இடம்பெற்றது. 

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை சாலையில் அணிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை இடம் பெற்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையவாசிகள் ட்விட்டர் பக்கத்தில் #ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter trending for urthiyil uthari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->