இந்து வாழ்வியலே சனாதனம்! உதயநிதியால் இந்து தர்மத்திற்கு ஆபத்து - எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்சிருணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசியதாவது, சனாதனம் என்ன என்பதை உச்சநீதிமன்றமே கூறிவிட்டது இந்து வாழ்வியலே சனாதனம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் மட்டுமே உண்மை நிலை வரும் வெளிவரும். ரவுடி திருவேங்கடத்தை எதற்க்காக அவசர அவசரமாக காவல்துறை துப்பாக்கியால் சூட்டு கொலை செய்தார்கள். யாரை காப்பாற்றுவதற்க்காக இந்த என்கவுண்டர்.

சனாதனம் பற்றிய எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. உணவு, கல்வி மருத்துவம் எல்லாம் தற்போது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. இந்து தர்ம சனாதனத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். சனாதனத்தை எதிர்த்து தொடர்ந்து அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் மட்டுமே உண்மை நிலை வரும் வெளிவரும். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இன்று தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi Deputy Chief Minister But the greatest threat to Hindu Dharma is H Raja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->