காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்: எப்போது தெரியுமா?
Udayanidhi Stalin prasaram
தி.மு.க இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகர், காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கி உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டை, மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி போன்ற ஊர்களுக்கு சென்று தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரையில் பிரசாரம் செய்த பிறகு அமைச்சர உதயநிதி ஸ்டாலின் விமான மூலம் இரவு சென்னை திரும்புகிறார்.
நாளை மாலை 5 மணி அளவில் காஞ்சிபுரம் சென்று தி.மு.க வேட்பாளர் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதன் பிறகு திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி போன்ற ஊர்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை ஒட்டி மாவட்ட கழகச் செயலாளர் பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
English Summary
Udayanidhi Stalin prasaram