பவன் கல்யாண் வாயை மூடிய உதயநிதி!...என்ன நடக்கிறது?
Pawan kalyan shut up udayanidhi what happening
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசி இருந்த நிலையில் தற்போது அவர் பதில் அளித்துள்ளார்.
அண்மையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள் என்று, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.
மேலும், உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள் என்று கூறியுள்ள பவன் கல்யாண், சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்றும் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனம் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தாவது, பொறுத்திருந்து பாருங்கள் என்று சிரித்த முகத்துடன் [LETS WAIT AND SEE] பதில் அளித்துள்ளார்.
English Summary
Pawan kalyan shut up udayanidhi what happening