#BigBreaking || ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம்.! மூன்றாவதாக ஒரு நாடு களமிறங்கி போர் நடத்த தொடங்கியது.!
UkraineRussiaWar Russia
உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை சற்று முன்பு தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யா தன் இலக்குகளை அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலை தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் மரியபோல் நகரில் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடும் உக்ரைன் மீது தாக்குதலை தொடக்கி உள்ளது. இதன்மூலம், ரஷ்ய-உக்ரைன் போரில் மூன்றாவதாக ஒரு நாடு களமிறங்கி போர் நடத்த தொடங்கியுள்ளது.