நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு.? - மாநகராட்சி ஆணையர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்தை பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் இதுவரை சென்னை மாநகராட்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இதுவரை ரூ.16 லட்சம் பணமும், ரூ.1.26 கோடி மதிப்புள்ள பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urban local election Chennai zone hand over unproper documents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->