நாளை சென்னையில் சம்பவம்.. தமிழகத்தில் அடுத்த 7 நாள் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
Chennai Tamilnadu Weather Report Rain Alert
தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை பேய் வாய்ப்புள்ளது.
நாளை சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள், 8ஆம் தேதி, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 9 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், 10ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 11ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்க, 12ஆம் தேதி கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai Tamilnadu Weather Report Rain Alert