அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் 05 நாட்கள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் 05 சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இதன்படி, வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அவர் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இவருடன் அமெரிக்காவின் 02-வது பெண்மணியான, இந்திய வம்சாவளியான அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களின் குழந்தைகளும் வருகை தரவுள்ளனர். இதுதவிர, அந்நாட்டின் அரசு நிர்வாகத்தின் முக்கிய மூத்த உறுப்பினர்களும் வருகின்றனர்.

இந்த பயணத்தின் போது, 21-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனை தொடர்ந்து, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வான்சும், அவருடைய குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரங்களுக்கும் வான்ஸ் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்பின்னர் 24-ந்தேதி வாஷிங்டன் டி.சி.க்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US Vice President JD Vance is on a 5 day tour of India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->