#BigBreaking || உத்தர பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தல் - அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையர்.!
uttar pradesh state assembly elections go ahead as planned
திட்டமிட்டபடி உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், விரைவில் உத்திரப்பிரதேசத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே, தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா தொற்று நிலவரம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷனிடம், தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் விவரங்களை கேட்டறிந்தனர்.
அப்போது, தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்த்ர தெரிவிக்கையில்,
"உத்தரபிரதேச மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால், நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு விதிகளுடன் தேர்தல் நடைபெறும். உத்தரபிரதேச மாநிலத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முறை சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்.
கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்க கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்" என்று தேர்தல் ஆணையர் அந்த பெட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
uttar pradesh state assembly elections go ahead as planned