12 மணிநேர வேலை.."திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என நம்பினோம்".. வைகோ கண்டனம் அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதாவானது உழைப்பு சுரண்டலுக்கு வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் வகையில் தொழிற்சாலைகள் சட்டம் 2023 சட்ட முன் வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி ஒரு நாள் ஓய்வு என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. அதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது. மத்திய அரசின் பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்ட திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. 

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்பசாரா உடல் உழைப்பு தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளார்கள். தற்போது 8 மணி நேர வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் சூழல்தான் இருந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டு விடும், வேலையின்மை பெறும் ஆபத்து இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணிநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திச் சட்டம் இயற்றியுள்ளன. அதே நிலை தமிழகத்தில் உருவாவதை தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலக்கு எதிராக 65ஏ சட்ட திருத்த முன்வரை வைத்து திரும்ப பெற வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko statement of condemnation against 12hr work bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->